NFPE
அகில இந்திய RMS & MMS ஊழியர் சங்கம்-Group ‘C’
RMS ‘T’ கோட்டம், திருச்சி-620001.
வெள்ள நிவாரண நிதி வழங்கியோருக்கு நன்றி !
சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட [i]நமது சகோதர சகோத்ரிகளுக்கு உதவிடும் பொருட்டு NFPE இணைப்புக்குழுவின் சார்பாக நிதி கேட்டு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க தோழர்கள் தோழியர்கள் அனைவரும் மனமுவந்து நிதி வழங்கி உதவினர். அஞ்சல், RMS ஊழியர்கள் வழங்கிய நிதி மொத்தம் ரூ.42,610/-
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகிலுள்ள கண்டியாமேடு என்கிற கிராமத்தை சேர்ந்த 125 குடும்பங்களுக்கு 4 கிலோ அரிசி, ஒரு போர்வை, பிஸ்கட், சிறிய ஹார்லிக்ஸ் பாக்கெட் ஆகியவை வழங்கப்ப்ட்ட்து.
100 குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கிட முதலில் முடிவு செய்யப்பட்டது. எனினும் அங்கிருந்த குடும்பங்களின் எண்ணிக்கை 125 என்பதால் அவர்கள் அனைவருக்கும் வழங்கிட வேண்டிய நிலையை உணர்ந்து, நமக்கு கிடைத்த நிதிக்குட்பட்டு நிவாரணம் வழங்கிட நாம் ஆலோசித்தோம். ஆனால் வழங்க வேண்டிய பொருட்களின் அளவை குறக்க வேணடாம் என்ற கோரிக்கையோடு மேலும் சில நல்ல உள்ளங்கள் உதவிட முன் வந்தன.
கும்பகோணம் தோழியர்..G.பொன்னி, HSG II SRO அவர்களின் அன்பு மகள் அனிஷா மற்றும் மருமகன் விஷ்ணுபிரசாத் அவர்களும் 125 Kg அரிசிக்கான செலவை (ரூ.4375) ஏற்றுகொள்வதாக நெகிழ்ச்சியோடு அறிவித்ததோடு நமது கும்பகோணம் தோழர்களின் உதவியோடு அங்கேயே அரிசியை வாங்கி சிறு,சிறு சிப்பங்களாக கட்டி, அலுவலகம் வரை அனுப்புவதற்கான செலவையும் தாங்களே ஏற்றுகொணடனர். மண்டலச்செயலர் தோழர்.T.பாலப்ரமணியன் அவர்கள் பிஸ்கட்டுக்கான செலவு ரூ.1400/- ஏற்றுக்கொண்டார். தோழர்.K.மருதநாயகம்,P3 செயலர், ஹார்லிக்ஸ்-க்கான ஏற்பாட்டை தான் சார்ந்துள்ள தொண்டு நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்தார். P4 கோட்டச்செயலர்
தோழர்.S.கோவிந்தராஜ் அவர்கள் பொருள் வாங்குவதற்காக தனது வாகனத்தை அளித்து உதவினார். அவரோடு நமது கோட்டத்தலைவர் தோழர் P.குணசேகரன் பொருட்களை வாங்குவதில் உதவி புரிந்தார். மற்றும் நிவாரணம் வழங்குமிடத்திலேயே தோழர்.M.கவனகன் அவர்கள் மேலும் ரூ.1300/-க்கான பிஸ்கட் வழங்கிட ஏற்பாடு செய்தார். இத்தகைய தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.
கரூர் தோழர்கள் போர்வைக்கான நிதியை
பெருமளவில் வழங்கியதோடு அவற்றை வாங்கி, பேக்கிங் செய்து அனுப்பி வைத்து உதவினர். கும்பகோணம் R3, R4 தோழர்கள் அரிசி வாங்கி ரயிலில் ஏற்றி அனுப்புவது வரை உதவி செய்தனர். சிதம்பரம் கிளைச்செயலர் தோழர்.S.பரமசிவம், தோழர்கள் K.மணி, S.செல்வகுமார், TN.சாமிநாதன், G.ராயல்ராஜா,G.கிருஷ்ணமூர்த்தி,T.பிரபாகரன், வாகன ஓட்டுனர்கள் இருவர் ஆகியோர் நடு இரவிலும் பொருட்களை ரயிலிலிருந்து ஏற்றி இறக்கி அடுத்தநாள் மதியம் வரை கூடவே இருந்து உதவி புரிந்தனர். இவர்களோடு முன்னாள் R3 கிளைத்தலைவர் தோழர் T.ஆனந்தன், கடலூர் P3 கோட்டத்தலைவர் தோழர் P.இரவி, கோட்டச்செயலர் தோழர்.அறிவுக்கரசு மற்றும் சோமு, கலையரசன் ஆகியோர் நமக்கு உதவினர்.
அதோடு HRO திருச்சி, தஞ்சாவூர், கரூர் தோழர்கள் விடுமுறை எடுத்துகொண்டு பெருமளவில் நிவாரணப்
பணியில் கலந்து கொண்டனர்.
நிவாரணக் குழு
தங்குவதற்கும் பொருட்களை வைப்பதற்கும் சிதம்பரம், மயிலாடுதுறை RMS அலுவலகங்களை பயன்படுத்தி கொள்ள SSRM, ASRM
(HQrs) ஆகியோர் அனுமதி அளித்தனர்.
சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.பாலகிருஷ்ணன் அவர்கள், நிவாரண பொருட்களை அமைதியான முறையில் வழங்கிட ஏற்பாடு செய்தார்.
இப்படி நாம் எதிர்பார்த்ததைவிட நிறைவாக நமது சங்கத்தின் சமூக கடமையை நிறைவு செய்தோம். நாம் செய்தது சிறிய உதவிதான் என்றாலும் பாதிக்கப்பட்ட மக்கள் அதைபெறுகின்றபோது அவர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இப்படிபட்ட மகத்தான சேவையில் பங்கு கொண்ட தோழர்கள் தோழியர்கள் அனைவருக்கும் NFPE –R3 கோட்டச்சங்கம் தனது நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகிறது.
புதிய தோழர்களுக்கு பயிற்சிக்கான உத்தரவு;
2015’ மார்ச் மாதம் தேர்வு செய்யப்பட்ட புதிய தோழர்களுக்கு பயிற்சி வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. நமது கோட்ட்த்திலிருந்து 6 பேர் பயிற்சிக்கு அனுப்ப்ப் படுவார்கள். விரைவில் உத்தரவு வரும்.
T 4 Section– FNO- சும்மா வந்துவிடவில்லை;
26.08.2015 28.09.2015 மாதாந்திர பேட்டிகள், 04.10.2015 கரூர் DWC தீர்மானம், 10.10.2015 SSRM –அவர்களுடன் சிறப்பு பேச்சு வார்த்தை போன்ற NFPE–R3 சங்கத்தின் தொடர்முயற்சியால்
மட்டுமே போடப்பட்டதுதான் 23.10.2015
தேதியிட்ட SSRM உத்தரவு: அதுமட்டுமல்ல ! எங்களுடைய தோழர்கள் D.இராஜ்பாபு, U.கவியரசபிரபு, A.கர்ணன்,S.குணசேகரன், A.சரவணகுமார்,R.யுவராஜ் போன்ற தோழர்கள் இதற்காக தொடர்ந்து போரடியதையும் அவர்களுக்கு ஏற்பட்ட
இழப்பையும் மற்றும் தோழர்.P.குணசேகரன் அவர்கள் T 4 Section- working hours-ஐ நிர்ணயம் செய்து கொடுத்த்தும்
இந்த கைகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
இவர்கள் 31.12.2015 அன்றுகேட்டார்களாம்! உடனே SSRM அவர்கள் இரண்டு மாதத்திற்கு முன்பாகவே 23.10.2015 அன்றே உத்தரவு போட்டுவிட்டாராம் ! “கேழ்வரகில் நெய் வடியும்” கதையை இன்னும் எத்தனை நாள்தான் சொல்லுவார்களோ!
அடுத்தவர்கள் உழைப்பை சொந்தம் கொண்டாடுவதும், அதிலேயே உண்பதும் ஓய்வில் திளைப்பதும் இவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் சோகம்; அதை நம்மால் மாற்ற முடியாது. ஆனால் தன்னை எல்லோருக்கும் நியாயவானராக காட்டிகொண்டு போஸ்டர் ஒட்டும் சிற்றம்பலத்திற்கு பொன் வேய்ந்த சோழன் தெரிந்தே தவறு செய்வதுதான் வேடிக்கை.
சங்கப் பணியிலும் சமுதாய பணியிலும் நமது நேர்மையான பயணம் தொடரும்!
இப்படிக்கு
தோழமையுடன்
11.01.2016 T.குணசேகரன்
கோட்டச்செயலர்
|
11 Jan 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment