1 Dec 2014

PMG பகதூர் சிங் மாற்றம்

தோழர்களே! தோழியர்களே! வணக்கம்  !                                              
    NFPE-R3 RMS `T` கோட்டச் சங்கத்தின் அயராத வலிமையான தொடர்போராட்டத்தின் விளைவாக, ஊழல், இலஞ்சம், எண்ணற்ற முறைகேடுகளின் மொத்த உருவாமக திகழ்ந்த திருச்சி மண்டல PMG பகதூர் சிங் அவர்கள்  டேராடுனுக்கு ஒரு டம்மி பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

         அது மட்டடுமல்ல தோழர்களே! அவர் செய்த ஊழலுக்காக, இலாகாவின் மிக உயர்ந்தப் பட்ச தண்டனை நடவடிக்கையான  RULE 14  மெமோவும் வழங்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளார். மக்களுக்கு எதிராகவும், ஊழியர்களுக்கு எதிராகவும் செயல்படும் யாராக  இருந்தாலும் நம்முடைய போராட்டத்தின் முன்பு  நிலைத்திருக்க முடியாது என்பதை நாம் மீண்டும் நிரூபித்துள்ளோம்.

            ஊழலுக்கும் இலஞ்சத்துக்கும் துணை போனவர்கள்.மீதும் முறைகேடாக சலுகைகள் பெற்றவர்கள் மீதும் நடவடிக்கை பாய்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் அனைத்து ஊழல்களும் வெளியில் வரும்.

     அனைத்துப் போராட்டங்களளிலும் கலந்துகொன்ண்டு ஆதரவு நல்கியதோடு மாநில நிர்வாகத்தின் கவனத்துக்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுத்த  அன்றைய மாநிலச்செயலர் அருமை தோழர் K.சகங்கரன் அவர்களுக்கு கோட்டச்சங்கத்தின் மனமார்ந்த நன்றியை  உரித்தாக்குகிறோம்.. அதுபோலவே இன்றைய மாநிலச்செயலர் தோழர் K . இரமேஷ் அவர்களுக்கும் நன்றி.

           ஒரு மாதத்திற்க்குள் பஹதூர் மாற்றப்படுவார் என்று  செப்டெம்பர்  மாதம் கோவை மாநில மாநாட்டில் உறுதியளித்தப்படி மாற்றி காட்டிய NFPE-R3 பொதுச்செயளாலர் தோழர் கிரிராஜ்சிங்  அவர்களுக்கும்  NFPE மாபொதுச்செயளாலர் தோழர் M.கிருஷ்ணன்,தோழர்.R.N.பராசர் அவர்களுக்கும் கோட்டச்சங்கத்தின்  நன்றியை உரித்தாக்குகிறோம்.

            அஞ்சல், RMS இணைப்புக்குழு ஆரம்பித்து உரிய நடவடக்கைகள் எடுத்த அதன் கன்வீனரும் R3 மண்டலச்செயளாலரருமாகிய தோழர் M.கவனகன் அவர்களுக்கும் ஆதரவு நல்கிய மகாசம்மேளன கன்வீனர் தோழர்.N.செல்வன், P3 கோட்டச்செயளாலர் தோழர் K.மருதநாயகம், P4 கோட்டச்செயளாலர் தோழர் S.கோவிந்தராஜ், GDS கோட்டச்செயளாலர் தோழர் P.பன்னீர்செல்வம், R4 கோட்டச்செயளாலர் தோழர் T.P.இரமேஷ், GDS (RMS) கோட்டச்செயளாலர்கள் தோழர்கள் M.துரை, K.சுரேஷ் ஆகியோருக்கும் கோட்டச்சங்கத்தின் நன்றி.

      எல்லாவற்றிற்கும் மேலாக  மூண்றாண்டு காலமாக நடைபெற்ற எண்ணற்ற போராட்டங்கள் அனைத்திலும் சளைக்கமல் கலந்து கொண்டு வெற்றியை தேடி தந்த கிளைச்செயளர்கள் கோட்டச்சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் கோட்டச்சங்கத்தின் நன்றியை உரித்தாக்குகிறேன்.

                         "போராட்டத்தின் முன்னே யாரட்டமும் செல்லாது"






2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஊழலை எதிர்த்து நடை பெற்ற போராட்டத்தில் NFPE-R3 T DIVISION வெற்றி பெற்றுள்ளது. ஊழலை எதிர்த்த தங்களது போராட்டங்கள் தொடர வாழ்த்துக்கள். பழனி சுப்ரமணியன் , தூத்துக்குடி

    ReplyDelete