21 Dec 2014

நமது நீண்ட நெடிய போராட்டத்திற்கு  கிடைத்த மாபெரும் வெற்றி!

Tiruchy Speed  அலுவலகத்தை மீண்டும்Tiruchy HPO வளாகத்துக்கு மாற்றிட
 CHIEF PMG அவர்கள்
உத்தரவிட்டுள்ளார்.
 24 Hours booking சேவையை மீண்டும் தொடங்கிட ஏரற்பாடு தீவிர நடவடிக்கை.
 Speed-ல் மேலும்   2 day sets கிடைத்திட வாய்ப்பு.


மேலும் சட்டத்துக்கு புறம்பான மாறுதல்கள் உட்பட முன்பு நடந்த அனைத்து நடவடிக்கைகள் மீதும் விசாரணை ஆரம்பித்து விட்டது.


விசாரணையும் மாற்றங்களும் தொடரும்.                                                                                                                   

                                                                                                                    T.குணசேகரன்
                                                          கோட்டச்செயலர்.


 -------------------------------------------------------------------------------------------------------

PMG -அவர்களுடன் சந்திப்பு
தோழர்களே, தோழியர்களே ! வணக்கம்.

HRO கிளை மாநாடு நிறைவுற்றப் பிறகு 15.12.2014 – திங்களன்று மாநிலச் செயலர் தோழர்.K.இரமேஷ் அவர்கள் மத்திய மண்டல PMG அவர்களை சந்தித்து `T` கோட்டப் பிரச்சனைகள் குறித்து விவாதித்தார்.

மாநிலச் செயலருடன், மாநிலச் சங்க நிர்வாகிகள், R3, R4 கோட்டச் செயலர்கள், HRO R3 கிளைச் செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.தஞ்சைத் தோழர்.S.குணசேகரன் உடனிருந்தார்

PMG அவர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில், கீழ்க்கண்ட முக்கிய பிரச்சனைகள் சிலவற்றை தீர்த்திட உத்தரவாதம் அளித்துள்ளார்.

1.    Tiruchy Speed அலுவலகம் தரை தளத்திற்கு மாற்றப்படும்.
2.    திருவாருர், மயிலாடுதுறை, கும்பகோணம், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, விருத்தாசலம் day set பணிகள் Night set-க்கு மாற்றப்படும். அதற்கேதுவாக Mail arrangment மாற்றப்படும்.
3.    நிலுவையிலுள்ள மருத்துவப்படிகள் உடனடியாக வழங்கிட ஏற்பாடு செய்யப் படும்.
4.    விளையாட்டு வீரர்களுக்கான (தஞ்சைத் தோழர்.S.குணசேகரன்) மாற்றல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
5.    திருச்சி பார்சல் அலுவலகம் வசதியான வேறொரு இடத்திற்கு மாற்றப்படும்.
6.    மகளிர் ஊழியர்களுக்கு தனியே சாப்பட்டு அறை, ஓய்வு அறைகள் முன்பிருந்தது போல் ஏற்பாடு செய்யப்படும்.

அன்றே நமது SSRM அவர்களையும் சந்தித்து நமது பிரச்சனைகள் குறித்து விவாதித்துள்ளோம். நமது மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு நமது பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு கிடைக்குமென நம்புகிறோம்.

வாழ்த்துக்களுடன்.
திருச்சி-620001.                                                                 தோழமையுடன்
16.12.2014.                                                                         T.குணசேகரன்.
                                                       கோட்டச்செயலர்.


4 Dec 2014

Comrades, 
          We  officially  inaugurated  our  "BLOG" in the website, just  before three days only. Within three days 300 visitors/times the website was viewed not only by ours members but others also.

       Thus its a successful one and the Divisional Union would utilize it to improve our functionings.

             Comments from all especially from OUR MEMBERS  are invited .
                                                                
                                                            THANK YOU

                                                                                                            T.Gunasekaran
                                                                                                        Divisional Secretary


2 Dec 2014

                                                  செங்கை கோட்டச் செயற்குழு  - 29.11.2014 (சனி)

                       நமது கோட்டச் செயற்குழுக் கூட்டம் செங்கையில் 29.11.2014 (சனி) அன்று  தோழர் .G.வைத்தியநாதன் அவர்கள் தலைமையில் நடை பெற்றது.

                          செங்கை கிளைத் தோழர்கள் மிக சிறப்பான ஏற்பாடுககளை செய்திருந்தனர்.

                        பெரும்பாலான கிளைகளும்  கோட்டச்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

                        நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  விரைவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டு பேச்சு வார்த்தை நடத்தப்படும்.

                          இரொண்டொரு நாட்களில் தீர்மானங்கள் நமது வலைதளத்தில் வெளியிடப்படும்.
                                                                                                        T.குணசேககரன்                                                                                                                                 கோட்டச் செயலர்

புதிய PMG மற்றும் புதிய  SSRM

swachh bharat க்கான பட முடிவு
தோழர்களே! தோழியர்களே !
           PMG திரு.பகதூர்சிங்  டேராடுனுக்கு மாற்றப்பட்ட பிறகு,  திரு.J.T. வெங்கடேஷ்வரலு, IPS அவர்கள் 20.11.2014 அன்று நமது திருச்சி மண்டல  PMG-யாக பொறுப்பேற்றுள்ளார்கள். 

          இதற்கு முன்பு  Circle Ofiice-ல் DPS (CCR) ஆக திறம்பட பணியாற்றியவர்; ஊழியர் நலனில் அக்கறை கொண்டவர்; இலாகாவை காப்பாற்ற வெண்டுமென நினைப்பவர்; சட்ட நுணுக்கங்கங்கள் தெரிந்தவர்; எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மைக்கு பெயர் பெற்றவர்.
         
  ஊழலும் இலஞ்சமும் புரோக்கர்களின் சாம்ராஜ்ஜியமும் புரையோடிவிட்ட நமது மண்டலத்தை SWACHH MANDAL
                        swachh bharat க்கான பட முடிவுSWACHH MANDAL-ஆக
 மாற்ற வேண்டிய மிக பெரிய பொறுப்போடு, இலாகாவின் சேவைகளை மேம்படுத்தும் பணிகளையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையோடு அவரது பணி சிறக்க NFPE-R3 `T` கோட்டச் சங்கம் மனமார்ந்த வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொள்கிறது. 

             SSRM திரு.A.கணேசன் அனவர்கள்  SSP-யாக மாறுதல் பெற்ற பிறகு திரு.M.பாலசுப்ரமணியன் அவர்கள் நமது கோட்ட SSRM-ஆக பொறுப்பேற்றுள்ளாறர்.
          
              இதற்கு முன்பு சென்னை அண்ணா சாலை SENIOR POST MASTER-ஆக பணியாற்றியவர்; நல்ல அதிகாரி என பெயரெடுத்தவர்.அவரது பணி சிறக்க NFPE-R3 `T` கோட்டச் சங்கம் வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொள்கிறது. 

                                                                                                            T.குணசேகரன்
                                                                                                          கோட்டச் செயலர்.

1 Dec 2014

Income Tax Rates For Assessment Year 2015-16

TUESDAY, DECEMBER 2, 2014


Income Tax Rates For Assessment Year 2015-16
This part is applicable to a Resident Individuals below the age of 60 Years Notes :


Net income range
Income-tax rates
Surcharge
Education cess
Secondary and higher education cess
Up to Rs. 2,50,000
Nil
Nil
Nil
Nil
Rs. 2,50,000 – Rs. 5,00,000
10% of (total income minus Rs. 2,50,000) [see Note 1]
Nil
2% of income-tax
1% of income-tax
Rs. 5,00,000 – Rs. 10,00,000
Rs. 25,000 + 20% of (total income minus Rs. 5,00,000)
Nil
2% of income-tax
1% of income-tax
Rs. 10,00,000 – Rs. 1,00,00,000
Rs. 1,25,000 + 30% of (total income minus Rs. 10,00,000)
Nil
2% of income-tax
1% of income-tax
AboveRs. 1,00,00,000
Rs. 28,25,000 + 30% of (total income minus Rs. 1,00,00,000)
10% of income-tax [see Note 2]
2% of income-tax and surcharge
1% of income-tax and surcharge
1. Rebate under section 87A – A resident individual (whose net income does not exceed Rs. 5,00,000) can avail rebate under section 87A. It is deductible from income-tax before calculating education cess. The amount of rebate is 100 per cent of income-tax or Rs. 2,000, whichever is less.
2. Surcharge – Surcharge is 10 per cent of income-tax if net income exceeds Rs. 1 crore. It is subject to marginal relief (in the case of a person having a net income of exceeding Rs. 1 crore, the amount payable as income tax and surcharge shall not exceed the total amount payable as income-tax on total income of Rs. 1 crore by more than the amount of income that exceeds Rs. 1 crore).
3. Education cess – It is 2 per cent of income-tax and surcharge.
4. Secondary and higher education cess – It is 1 per cent of income-tax and surcharge.
• Alternate minimum tax – Tax payable by a non-corporate assessee cannot be less than 18.5 per cent (+SC+EC+SHEC) of “adjusted total income” as per section 115JC

நன்றி ! தோழர் மதிக்கண்ணன்.

தோழர்
மதிக்கண்னணன், 
   NFPE-R3 சங்கத்தின் வலைதளத்தை மேம்படுத்த உதவிய தங்களுக்கும் எங்களது முன்னணித் தோழர்  தஞ்சை  JG அவர்களுக்கும் மிக்க நன்றி....வேறு எதேனும் தொழில்நுட்ப உதவி தேவபடின் மின்னஞலில் அல்லது தோழர் JG மூலம்தொடர்பு கொள்கிறேன்.நன்றி..................T.குணசேகரன்,கோட்டச்செயலர்-NFPE-R3,RMS`T`கோட்டம்.திருச்சி.

PMG பகதூர் சிங் மாற்றம்

தோழர்களே! தோழியர்களே! வணக்கம்  !                                              
    NFPE-R3 RMS `T` கோட்டச் சங்கத்தின் அயராத வலிமையான தொடர்போராட்டத்தின் விளைவாக, ஊழல், இலஞ்சம், எண்ணற்ற முறைகேடுகளின் மொத்த உருவாமக திகழ்ந்த திருச்சி மண்டல PMG பகதூர் சிங் அவர்கள்  டேராடுனுக்கு ஒரு டம்மி பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

         அது மட்டடுமல்ல தோழர்களே! அவர் செய்த ஊழலுக்காக, இலாகாவின் மிக உயர்ந்தப் பட்ச தண்டனை நடவடிக்கையான  RULE 14  மெமோவும் வழங்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளார். மக்களுக்கு எதிராகவும், ஊழியர்களுக்கு எதிராகவும் செயல்படும் யாராக  இருந்தாலும் நம்முடைய போராட்டத்தின் முன்பு  நிலைத்திருக்க முடியாது என்பதை நாம் மீண்டும் நிரூபித்துள்ளோம்.

            ஊழலுக்கும் இலஞ்சத்துக்கும் துணை போனவர்கள்.மீதும் முறைகேடாக சலுகைகள் பெற்றவர்கள் மீதும் நடவடிக்கை பாய்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் அனைத்து ஊழல்களும் வெளியில் வரும்.

     அனைத்துப் போராட்டங்களளிலும் கலந்துகொன்ண்டு ஆதரவு நல்கியதோடு மாநில நிர்வாகத்தின் கவனத்துக்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுத்த  அன்றைய மாநிலச்செயலர் அருமை தோழர் K.சகங்கரன் அவர்களுக்கு கோட்டச்சங்கத்தின் மனமார்ந்த நன்றியை  உரித்தாக்குகிறோம்.. அதுபோலவே இன்றைய மாநிலச்செயலர் தோழர் K . இரமேஷ் அவர்களுக்கும் நன்றி.

           ஒரு மாதத்திற்க்குள் பஹதூர் மாற்றப்படுவார் என்று  செப்டெம்பர்  மாதம் கோவை மாநில மாநாட்டில் உறுதியளித்தப்படி மாற்றி காட்டிய NFPE-R3 பொதுச்செயளாலர் தோழர் கிரிராஜ்சிங்  அவர்களுக்கும்  NFPE மாபொதுச்செயளாலர் தோழர் M.கிருஷ்ணன்,தோழர்.R.N.பராசர் அவர்களுக்கும் கோட்டச்சங்கத்தின்  நன்றியை உரித்தாக்குகிறோம்.

            அஞ்சல், RMS இணைப்புக்குழு ஆரம்பித்து உரிய நடவடக்கைகள் எடுத்த அதன் கன்வீனரும் R3 மண்டலச்செயளாலரருமாகிய தோழர் M.கவனகன் அவர்களுக்கும் ஆதரவு நல்கிய மகாசம்மேளன கன்வீனர் தோழர்.N.செல்வன், P3 கோட்டச்செயளாலர் தோழர் K.மருதநாயகம், P4 கோட்டச்செயளாலர் தோழர் S.கோவிந்தராஜ், GDS கோட்டச்செயளாலர் தோழர் P.பன்னீர்செல்வம், R4 கோட்டச்செயளாலர் தோழர் T.P.இரமேஷ், GDS (RMS) கோட்டச்செயளாலர்கள் தோழர்கள் M.துரை, K.சுரேஷ் ஆகியோருக்கும் கோட்டச்சங்கத்தின் நன்றி.

      எல்லாவற்றிற்கும் மேலாக  மூண்றாண்டு காலமாக நடைபெற்ற எண்ணற்ற போராட்டங்கள் அனைத்திலும் சளைக்கமல் கலந்து கொண்டு வெற்றியை தேடி தந்த கிளைச்செயளர்கள் கோட்டச்சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் கோட்டச்சங்கத்தின் நன்றியை உரித்தாக்குகிறேன்.

                         "போராட்டத்தின் முன்னே யாரட்டமும் செல்லாது"