10 Aug 2015

உறுப்பினர் சேர்ப்பு இயக்கம்’ 2015
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே !! வணக்கம்,

2015 -19 வருடத்திற்கான உறுப்பினர் சரிபார்ப்பு படிவங்கள் 06.8.15 அன்று SSRMஅவர்களிடம் வழங்கப்பட்ட்து.

நமது இலாகாவையும் ஊழியர்களையும் காத்திடும் வேள்வியில் களமிறங்கி தொடர்ந்து போராடும் நம் சங்கம் 215உறுப்பினர்களுக்கான படிவங்களை வழங்கி முதலிட்த்தில் உள்ளது..…FNPO -141, BPEF -7.

பின்னர் 07.8.15, கோட்ட கண்காணிப்பாளர் கூட்டிய பரிசீலனை கூட்டத்தில் NFPE, FNPO, BPEF சங்கங்களின் கோட்ட செயலர்கள் கலந்து கொண்டனர். நமது சங்கத்தின் சார்பாக கோட்டச்செயலர் தோழர் T.குணசேகரன் கலந்து கொண்டார்.

இதில் FNPO சங்கம் உறுப்பினர் படிவத்தில் தங்கள் சங்கத்தின் பெயரை National Union of RMS & MMS Employees'; Group-Cஎன்பதற்கு பதிலாக NUR C/FNPO R3 என்று (அதாவது List of applicant union- இல் இல்லாத ஒரு சங்கத்தின் பெயரை) குறிப்பிட்டுள்ளது என்பதை நாம் சுட்டிக்காட்டி நமது சங்கத்தின் ஆட்சேபணையை(objection) பதிவு செய்துள்ளோம்.

மேற்கொண்டு நிர்வாகத்தின் நடவடிக்கையினை பொறுத்திருந்து பார்ப்போம்.

நிலைமை இவ்வாறிருக்க FNPO சங்கத்தின் செயல்பாடுகள் பிடிக்காமல் நமது சங்கத்திற்கு உறுப்பினர் படிவம் கொடுத்த ஊழியர்களை மிரட்டும் பணியில் மேற்குறிப்பிட்ட சங்கத்தின் தலைமை இறங்கியுள்ளது.இதனை நமது சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு தேவைபடுமெனில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கிறோம்.

இவண்,

தோழமையுடன்
T.குணசேகரன்
கோட்டச் செயலர்











No comments:

Post a Comment