வெற்றி! வெற்றி!! வெற்றி!!!
மத்திய
மண்டல DPS அவர்களின் ஊழியர்விரோத/எதேச்சாதிகாரப் போக்கினைக் கண்டித்து
NFPE/FNPO/BPEF சங்கங்களை உள்ளடக்கிய RMS JCA
அமைக்கப்பட்டது. JCA சார்பாக பல கட்டப்
போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு, 15.3.2016 அன்று திருச்சி RMS அலுவலகம் முன்னர் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்ட தயாரிப்புகளை கண்டு
அஞ்சிய மத்திய மண்டல நிர்வாகம் 18.3.2016 அன்று கூட்டுப்போராட்டக் குழுவினைப் பேச்சுவார்த்தைக்கு
அழைத்தது.
மத்திய
மண்டல PMG அவர்களின் முன் நடைபெற்ற கூட்டத்தில் நமது சங்கத்தின் சார்பாக T. குணசேகரன்(D/Secy
R-3), ரமேஸ்(D/Secy R-4 & Regional Secy), கவனகன்(Asst. Circle Secy R-3) T. பாலசுப்பிரமணியன்(Regional
Secy R-3) மற்றும் JCAன் சார்பாக FNPO/BPEF சங்கத்தின் கோட்ட/மண்டலச் செயலர்கள் கலந்து
கொண்டனர்.அதில் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டது.
குறிப்பாக
1. திரு. யேசுதாஸ்(PTC, HRO) மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்.
2. பணியிலிருந்து நீக்கப்பட்ட SA outsiders மீண்டும்
பணியில் அமர்த்தப்பட்டனர்.
3. ஊழியர்கள் விடுப்பு எடுப்பதில் உள்ள தேவையற்ற தடைகள் நீக்கப்பட்டது.
4. HRO அலுவலகத்திலிருந்து அநாகரீகமாக எடுத்துச்செல்லப்பட்ட டேபிள் மீண்டும் போடப்பட்டது.
5. Recovery என்ற பெயரில் கண்மூடித்தனமாக ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வது நிறுத்தப்பட்டது.
6. இரண்டாம் மருத்துவ பரிசோதனை(Second Medical Opinion) என்ற பெயரில் ஊழியர்களை துன்புறுத்துதல் நிறுத்தப்பட்டது.
7. HRO மணமகிழ்மன்றத்தை WCTC ஆக மாற்றும் முயற்சி கைவிடப்பட்டது.
8. சோழன் எக்ஸ்பிரசில் தபால் பைகளை அனுப்புவது நிறுத்தப்பட்டது.
ஆனால், Dte. உத்திரவுகளுக்கு விரோதமாக சனிக்கிழமைகளில்
இரவு நேர பிரிப்பகங்களை மூடி பொதுமக்களின் கடிதங்களை தாமதப்படுத்தும் உத்திரவினை
CPMG அவர்களின் மறுபரிசீலனைக்கு மண்டல நிர்வாகம் அனுப்பியுள்ளது.
இப்பிரச்சினையை
நமது தமிழ்மாநிலச் சங்கம் தலையிட்டு உடன் தீர்த்துவைக்க வேண்டும் என கோட்டச் சங்கம்
கேட்டுக் கொள்கிறது.
பிரச்சினையை தீர்த்துவைக்க உதவிய மத்திய மண்டல PMG அவர்களுக்கும், உடன் தலையிட்ட மத்திய, மாநிலச்
செயலர்களுக்கும்,
இப்போராட்டத்தில்
கலந்துகொண்டு ஒத்துழைப்பினை நல்கிய அனைத்து சங்கத் தலைவர்களுக்கும்/உறுப்பினர்களுக்கும் நமது கோட்டச்சங்கத்தின்
வாழ்த்துக்கள்.
T. குணசேகரன்,
கோட்டச் செயலர்.
No comments:
Post a Comment