NFPE
அகில இந்திய RMS & MMS ஊழியர் சங்கம்-Group ‘C’
RMS ‘T’ கோட்டம், திருச்சி-620001.
====================================================
கோட்டச் செயற்குழுக் கூட்டம்
|
நமது சங்கத்தின் செயற்குழுக்கூட்டம் 04.10.2015 (ஞாயிறு) அன்று கரூரீல் கோட்ட்த்தலைவர் தோழர் P.குணசேகரன் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. கோட்டத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
R3 கிளைச் செயலர் தோழர்.C.கணேசன் அவர்களோடு R4 செயலர் தோழர்.A.பர்னபாஸ்,. GDS செயலர் தோழர் S.மைக்கேல்சாமி ஆகியோருடன் அனைத்து R3,R4, GDS, Outsider ஊழியர்கள் இணைந்து செயற்குழுக்கான ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்திருந்தனர்.ஒரு கோட்ட மாநாட்டை மிஞ்சுகிற வகையில் செயற்குழுவை மிக சிறப்பாக நடத்திய கரூர் கிளையின் அனைத்து R3,R4,GDS,Outsider தோழர்களுக்கும் கோட்டச்சங்கம் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது.
கோட்ட நிர்வாகக் குழுவில் ஏற்பட்ட காலியிடங்களுக்கு விழுப்புரம் தோழர் S.இரவி அவர்கள் துணைத் தலைவராகவும், கரூர் தோழியர்.N.மகேஷ்வரி அவர்கள் உதவி செயலராகவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.,
கோட்ட நிர்வாகக் குழுவில் ஏற்பட்ட காலியிடங்களுக்கு விழுப்புரம் தோழர் S.இரவி அவர்கள் துணைத் தலைவராகவும், கரூர் தோழியர்.N.மகேஷ்வரி அவர்கள் உதவி செயலராகவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.,
HRO - IC-1
tenure:
IC-1 tenure, முறைப்படி போடவேண்டுமென்று இலாகா சட்டவிதிகளையும், நமது கோட்டத்தில் தொடர்ந்து
கடைபிடிக்கப்படுகிற நடைமுறைகளையும் சுட்டிக்காட்டி நாம் SSRM,DPS மற்றும் PMG அவர்களுக்கு கடிதம் கொடுத்தோம். கோட்ட அலுவலகத்திற்கு ஏற்பட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு பலமுறை விரிவான விளக்கமும் கொடுத்தோம். நாம் வைத்த வாதங்களையும் சட்டவிதிகளையும்
ஏற்றுகொண்ட நிர்வாகம நமது தோழர் V.சிவராஜ் அவர்களுக்கு IC-1 tenure வழங்கி உத்தரவிட்டுள்ளது. சரியான உத்தரவுகளை வழங்கிய SSRM, DPS மற்றும் PMG அவர்களுக்கு நன்றி! பிரச்சனையை PMG அவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்ற மண்டலச் செயலர் தோழர் T.பாலசுரமணியன் அவர்களுக்கும் நன்றி.
நன்மையும் தீமையும் நலம்புரிந்த
தன்மையால் ஆளப்படும்
என்பதை IC-1 tenure - க்காக ஆளாய் பறந்தவர்கள் உணர்தல் நலம்.
SSRM அவர்களுடன் சிறப்பு பேட்டி:
நமது கோட்டச்செயற்குழுவின் முடிவின்படி கோரிக்கை பட்டியலை 08.10.2015 அன்று நிர்வாகத்திடம் அளித்தோம். SSRM அவர்கள் 14.10.2015 அன்று நம்மை பேச்சு வார்த்தைக்க்கு அழைத்தார். கோட்டச்செயலருடன், மண்டலச்செயலர் தோழர் T.பாலசுரமணியன், கோட்ட உதவிச்செயலர் தோழர்.M.இராஜேந்திரன், கரூர் கிளைச்செயலர் தோழர்.C.கணேசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். அதன்
தொடர்ச்சியாக 27.10.2015 அன்று
நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் தோழர் கோவிந்தராஜ் (கோட்டச்செயலர் i/c ), P.குணசேகரன் (கோட்டத்தலைவர்) K.அருண்குமார் (குடந்தை
கிளைச்செயலர்) ஆகியோர் கலந்துகொண்டு SSRM அவர்களுடன்
விவாதித்தனர்.
SSA ( TIRUCHY SPH ) பிரச்சனை தீர்ந்த்து;
இரவு 11 மணி முதல் காலை 05.00 மணி வரை SSA என்ற பெயரில் LR SA- க்கள் தினமும் இரவு பணிபார்க்க வேண்டிய கட்டாயம் ! SSA பணி பார்த்த பிறகு rest-க்கு பதிலாக ஒரு OFF கட்; பெண் தோழியர்கள் இரவு 11 மணிக்கு வீட்டிலிருந்து பணிக்கு புறப்பட வேண்டிய நிலைமை; SSA பணிக்கு வருகின்றபோது அவர்கள் பட்ட அவஸ்தை சொல்லில் அடங்காது.
அன்றைய PMG பகதூர்சிங் அவர்களின் ஊழியர் விரோத கொள்கைகளில் இதுவும் ஒன்று; NFPE R3 கோட்டச்சங்கம் தொடர்ந்து தற்போதைய PMG, SSRM ஆகியோரிடம் மாதாந்திர, இரு மாத பேட்டிகள் மற்றும் கடிதங்கள் மூலமாக 2 SSA-வை ஒரு முழு நேர SA-வாக மற்றக் கோரினோம்; எனினும் தீர்வில் தாமதம் ஏற்பட்டது.
இறுதியாக கரூர் (04.10.2015) செயற்குழுவின் முடிவின் படி SSRM அவர்களிடம் கோரிக்கை பட்டியல் அளிக்கப்பட்டு 14.10.2015 அன்று பேச்சு வார்த்தை நடத்தப்படட்து.;
அதன் விளைவாக உடனடியாக அக்டோபர் 20- ம் தேதி முதல் இரண்டு SSA-க்களையும் இணைத்து ஒரு முழு நேர SA-வாக வழங்கி SSRM அவர்கள் உத்தரவிட்டுள்ளார். ஊழியர்களின் கோரிக்கைகளை அவர்களின் நலன் சார்ந்து பர்சீலித்து உத்தரவு வழங்கிய PMG மற்றும் SSRM அவர்களுக்கு நன்றி.
கோட்டச்சங்கத்ன் வெற்றிக்கு ஒத்துழைப்பு
நல்கிய அனைத்து தொழர்களுக்கும் குறிப்பாக இளைய தோழர்கள் U.கவியரசபிரபு (கோட்டப் பொருளர்) D.இராஜ்பாபு, B.அசோகுமார், A.கர்ணன், A.சரவணகுமர், R.யுவராஜ், S.குணசேகரன் மற்றும் தோழர்கள் தோழியர்களுக்கும் நன்றி.
இவ்விசயத்தில் மாற்று சங்கம் எப்படி விளம்பரம் தேடுவார்கள் என்று கரூர் DWC-ல் தோழர் D.மோகன்ராஜ் அவர்கள் உரையாற்றிய போது விளக்கிய கூற்றும் உண்மையாயிற்று. 14-ம் தேதி நாம் SSRM அவர்களிடம் பேசி விட்டு வந்த மறு நிமிடமே அவர்களின் நோட்டீஸ் போர்டு அரிதாரம் பூசி கொண்ட்து.
புதுக்கோட்டை SRO பணி நேரம் மாற்றம்;
T 4 Section- mail Exchange செய்வதற்காக ஒரு SA-வின் பணி நேரத்தை மாற்றியதின் விளைவாக கடிதங்கள் தாமதமாவதையும், set-ல் பணிகள் பாதிக்கபடுவதையும் எடுத்து கூறி நாம் வைத்த மாற்று திட்டத்தை ஏற்றுகொண்ட நிர்வாகம் SRO பணி நேரத்தை மாற்றி உத்தரவிட்டுள்ளது..
NFPE சங்கம் மட்டும்தான் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமென்ற நம்பிக்கையோடு சங்க வேறுபாடில்லாமல் நம்மிடம் பேசிய புதுகோட்டை தோழர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.
மாறுதல் உத்தரவுகள்:
சட்டத்தை மதிக்கிற நேர்மையான PMG மற்றும் SSRM பொறுப்பேற்ற பிறகு மாறுதல் உத்தரவுகள் முறைப்படுத்தப் பட்டுள்ளன.
இலஞ்சம் கொடுப்பவர்க்கு மட்டுமே மாறுதல் என்கிற அவலத்தை துடைத்து எறிந்துள்ளோம். நாம் தொடர்ந்து போரடியதின் விளைவாக புதிய PMG பொறுப்பேற்ற உடனேயே பணத்துக்காக RO, PSD, RPLI –க்கு போடப்பட்ட முறையற்ற மாறுதல்கள் இரத்து செய்யப்பட்டன. இனி எக்காலத்திலும் இப்படி பணம் கொடுத்து ஊழியர்கள் ஏமாற வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்
திருச்சிக்கு மட்டும் பத்துக்கும் மேற்பட்ட, முறைப்படியான மாறுதல் உத்தரவுகளை நமது சங்கம் பெற்று தந்துள்ளது.
தற்பொழுதுகூட நமது தோழர்கள் திருச்சி M.பெரியசாமி, விழுப்புரம் S.வைகுண்டவிக்னேஷ்குமார் ஆகியோரின் மாறுதல்களுக்கு ஏற்பாடுசெய்துள்ளோம். மற்ற ஊர்களுக்குண்டான மாறுதல்களையும் முறைப்படுத்தியுள்ளோம்.
உறுப்பினர் சேர்ப்பு இயக்கம்;
இம்முறை நடைபெற்ற உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தின்போது 30 அதிகமான புதிய தோழர்களை நமது சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக சேர்த்துள்ளோம். மற்ற சங்கங்களை விட அதிக உறுப்பினர்களை சேர்ப்பதற்கு கடுமையாக உழைத்திட்ட கிளைச் செயலர்கள் கோட்டச்சங்க நிர்வாகிகள், மாநிலச்சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி ! பாராட்டுகள்.
நீதிமன்ற வழக்கில் வெற்றி ! NFPE-க்கும் நேர்மைக்கும் கிடைத்த பரிசு! பெருமகிழ்ச்சி!!!
இலஞ்ச இலாவண்யத்துக்கு எதிரான நமது போராட்ட த்தில் PMG பகதுர்சிங் அவர்களால் பழிவாங்கும் நோக்கில் தோழர்.D.இராஜ்பாபு, B.அசோகுமார்,V.இலக்ஷ்மிசரளா ஆகியோருக்கு போடப்பட்ட மாற்றல் உத்தரவை எதிர்த்து நமது கோட்டச்சங்கம் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் நமக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
தர்மம்தனை சூது கவ்வும்
இறுதியில் தர்மம் வெல்லும்.
NFPE கோட்டச்சங்கம் எடுத்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக வழக்கு நிதி அளித்து உதவிய கோட்டம் முழுவதுமுள்ள தோழர்கள் தோழியர்கள் அனவருக்கும் நன்றி.
NFPE கோட்டச்சங்கம் வெற்றியை தேடி தரும் என்ற நம்பிக்கையோடு வழக்கில் தங்களை இணத்துக் கொண்ட தோழர்.D.இராஜ்பாபு, B.அசோகுமார், V.இலக்ஷ்மிசரளா ஆகியோருக்கு கோட்டச்சங்கத்தின் வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள் !!
கும்பகோணம் RMS பணி மாற்றம்:
T 31 Section main line-ல் இயங்க தொடங்கிய பிறக அப்பகுதியில் உள்ள அலுவலகங்களில் தேவைபடும் மாற்றங்களை சுட்டிகாட்டி நடவடிக்கை எடுக்க கோரினோம்; அதற்கேற்ப கும்பகோணம் RMS பணி நேரம் 06.11.2015 முதல் மாற்றியமைக்கப் பட்டுள்ளது.
தஞ்சாவூர் RMS (Sat) பணி நேரம் விரைவில் மாற்றம்: தஞ்சையில் சனி மற்றும் PPH நாட்களில் இரவு 10.30 மணிக்கு பிறகே வீட்டிற்கு செல்ல முடியும் என்கிற நிலைமை விரைவில் மாற்றப்படும். Directorate
standing instruction- படி பணி நேரத்தை மாற்றும் நடவடிக்கை துரிதபடுத்தப் பட்டுள்ளது.
Whats App வம்பானந்தா !!!!
அங்கே எல்லொரும் மவுனமாக
இருந்ததால், தகுதிமிக்க ஒரு ஒருவரிடமிருந்து தட்டி
பறிக்கப்பட்டதுதான் வைவரின் கோ.செ. பதவி;. ஆனால் இவர் என்னவோ silicon valley-யை விலைக்க்கு வாங்கியவர் போல touch screen-ல் விரல் லாகவம் காட்டுகிறாராம்; ஆனால் இவர் touch screen-ல் கொட்டுவதெல்லாம் வெறும்
குப்பையாம்.
Whats App-ஐ பிடித்தவன் கையும்
வருமானம்
இழந்தவன் வாயும் சும்மா இருக்காதாம்!
நமது தோழர்கள் செங்கை V.குமார், விழுப்புரம் D.ஆதிமுருகன் மற்றும் சில தனிப்பட்ட தோழர்களை
விமர்சனம் செய்ய இந்த நபருக்கு எந்த அருகதையும்/அதிகாரமும் கிடையாது; அலுவலகத்தில் படம் எடுப்பதே CCS Conduct Rules –படி குற்றம்; கிரிமினல் சட்டமும் பாயும். இவர் மீது
மட்டுமல்ல! செங்கல்பட்டு மற்றும் விழுப்புரத்திலிருந்து படமெடுத்து அனுப்பும்
பிள்ளைப் பூச்சிகளின் மீது நடவடிக்கை பாய இருக்கிறது.
அந்தோ பரிதாபம் அவர்களின் members !
Whats App - பற்றி அவர்களின் உறுப்பினர்களே அவரிடம் கேட்டபோது, “ நான் உண்மையைதானே போட்டேன்; அப்படிதான் செய்வேன்; அவன்க என்ன செய்வான்க! விஸ்வநாதன் மேலேயும் HRO மேலேயும்தானே போடுவான்க; போட்டுக்கட்டும்” என்று மிக ‘பொறுப்போடு’ பதில் சொன்னாராம்! பாவம் அவர்களின் உறுப்பினர்கள்!
இவர்தான் அவர்கள் பற்றி
போடுவார் போல; ஏனெனில் திரு.K.விஸ்வநாதன் மீதும் திரு I.சேவியர் மீதும் எங்களுக்கு
தனிபட்ட விருப்பும் வெறுப்பும் எதுவும் கிடையாது; எல்லாமே issue basis-தான்; அதுவும் நாகரீகத்துடன்தான் இருக்கும். எதிர்வினையாற்ற எல்லோருக்கும் தெரியும்! பொறுமையும் அமைதியும் பலவீனம் அல்ல ! Whats App வம்பானந்தா இதை புரிதல் நலம் ! திருந்தினால் மகிழ்ச்சி!!
ஊழியர் விரோத செயல்களில் ஈடுபடுவோர்க்கு எச்சரிக்கை;
விழுப்புரத்தில் HSA என்கிற பெயரில் பட்டப் பகலில் தரையில் தம்பட்டம் அடிக்கும் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை முடுக்கிவிட பட்டுள்ளது.
மயிலாடுதுறை அப்படக்கர் HSA மீது விசாரணை ஆரம்பித்த பிறகு, அவர் பெண் ஊழியர்களை மிரட்டி தனக்கு சாதகமாக சாட்சி சொல்ல வேண்டும் என்று நிர்பந்தம் செய்ததாலும் விசாரணை அதிகாரி குற்றம் சுமத்தப்பட்டவர் முன்பே பெண் ஊழியர்களிடம் விசாரணை செய்ததாலும் இதன் நம்பகத் தன்மை குறித்து DPS அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விசாரனை மகளிர்க்கு எதிரான பிரிவுகளுக்கு மாற்றப்பட்டு WOMAN CELL மூலம் sue motto-வாக பெண் ஊழியர்களிடம் இரகசிய விசாரணை நட்த்தப்படும் என தெரிகிறது.
பாதகம் செய்வோரைக் கண்டால்
பயம் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா-அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா.
மயிலாடுதுறை தோழியர்கள் பாரதியார் கண்ட பாப்பாவாக மாறவேண்டும்.
கும்பகோணத்தில் சுவற்றில் அடித்த பந்தாக பொய் புகார் கொடுத்தவர் மீதே சட்டம் பாய்ந்துள்ளதால் நிலை குலைந்துள்ளார். அதே நேரத்தில் தவறை உணர்ந்து எங்கள் தோழர்களிடத்தில் நியாயமாக பேசினால் அவர்கள் உதவி புரிவார்கள்.
காமாலை கண்ணெனில் கீழாநெல்லி கசாயம் நிச்சயம்;
SA/PA -வாக பணி புரியும்வரை எல்லோரும் ஏதாவது ஒரு சங்கத்தில் உறுப்பினராக இருப்பது தவிர்க்க இயலாது. பெரும்பாலானோர் கொள்கை பிடிப்புடைய NFPE சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பார்கள். சிலர் வழக்கம் போல தங்களுடய சுயநலத்துக்காக வேறு சங்கங்களில் சாகசம் காட்டியிருபார்கள். IRM T 4 th Sub Division-ஆக பணி புரியும் திருவாளர் கண்ணன் அவர்கள் இரண்டாம் வகை.
ஆனால் இவர் பதவி உயர்வு பெற்று IRM ஆன பிறகும் தனது பழைய பாசத்தை மறக்கமுடியவில்லை போலும்; டெல்லியில் முகாமிட்டு IRM பதவியே விலைக்கு வாங்கியவர் என்ற பேச்சு
அப்போதே உண்டு. அப்படிபட்டவரிடம் நாம் நேர்மையை எதிர்பார்க்கவில்லை.
எனினும், நமது இலாகா ஊழியர்கள் 77:17:4 என்கிற விகிதபடி தொழிற்சங்கங்களில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள் என்ற உண்மை டெல்லியில் முகாமிட்ட கண்ணன் அவர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
அலுவலகத்தில் ஒரு பிரச்சனை என்று வந்து விட்டால் அதில் எல்லா சங்கத்தினருக்கும் ஏதாவது ஒரு வகையில் பங்கிருக்கும்.
அப்படி ஒரு பிரச்சனைக்கு விசாரணை நடத்தச் சொல்லி உத்தரவிட்டபோது, செங்கல்பட்டில் இவருடைய கண்டுபிடிப்பு என்னெவென்றால் “this issues was only on the union motive, nothing else” என்று நீளமாக தீர்ப்பு எழுதீருக்காராம்.
நாட்டாமை எப்படி தீர்ப்பு சொல்ல வரார்ன்னு தெரியுதா?! ஆல/ அரச மரத்தடி நாட்டாமை சொல்றார்.............எல்லோரும் நல்லா புரிஞ்சுக்கோங்க;
· இனி RMS
‘T’ Division -ல ...
SRO/HSA--க்கள் அவரவர்கள் சங்க உறுப்பினர்கள் மீது மட்டும்தான் ரிப்போர்ட் போடனும் ! ஏதாவது பைகள் வரவில்லை, இழப்பு,revised list தேவை என ரிப்போர்ட் போட்டு அது மாற்றுச் சங்கமெனில் நம்ம நாட்டாமை தீர்ப்பில் அது “union motive”.
· இரயில் தாமதமா !
“இரயில்
ஓட்டுநர்” கூட மாற்று சங்கத்தவர்தான்--.......................நம்ம நாட்டாமைக்கு!
· ஏதோ துரதிர்ஷ்டவசமாக திருடு என்றாலும் அது மாற்றுச் சங்கமானால் நம்ம நாட்டாமை தீர்ப்பில் ரொம்ப ஈசி .... அது “union motive”.
· Insured article இழப்பா ? மாற்று சங்க HSA--வா ! பயமேன் ? கண்ணன் வருவார் ! நல்ல கதை சொல்லுவார் !
· பெண் ஊழியர்களை மிக கேவலமாக நடத்துவார்கள்; திருவாளர் கண்ணன் அவர்களின் கண்ணுக்கு
இது ஒரு யமுனை நதிகரையோர விளையாட்டாக தெரிகிறது
போலும் !
· மது அருந்திவிட்டு யார் வேண்டுமானாலும் அலுவலகத்தில் அத்து மீறலாம் ! மாற்று சங்க HSA ரிப்போர்ட் எழுதினால் நம்ம நாட்டாமை “நல்ல தீர்ப்பு” சொல்லுவார் !
·
திருவாளர் கண்ணன் அவர்கள் சங்க கண்ணாடியை கழட்ட வேண்டும்;
காமாலை கண்ணுக்கு கண்டெதெல்லாம் மஞ்சளாம் !
கண்ணன் கீழாநெல்லி கசாயத்தை தானே சாப்பிட்டு தெளிய வேண்டும் !கசாயத்தை NFPE சங்கம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை
உண்டாக்கிட வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள் ! வயதில் இளையவர்; வளர வேண்டியவர்; மாற்றம் வரும் என நம்புகிறோம்.
கோட்ட நிர்வாகத்திற்க்கு நமது வேண்டுகோள் ! பெயரை கெடுக்க்க்கூடிய இவரை போன்றவர்களின் ஒருதலைபட்சமான விசாரணையை சற்று எச்சரிக்கையோடு அணுக வேண்டும்.
செப்’2 வேலை நிறுத்தம்;
7-வது ஊதியகுழு அமுல், GDS ஊழியர்களை 7-வது ஊதியகுழு வரம்புக்குள்
கொண்டுவருவது, மத்திய அரசின் ஊழியர/மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக 20 கோடி பேர் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து
கொண்டனர் ; ஜாதி, மதம் , பண்பாடு, கலாச்சாரம், உணவு பழக்கம் என எல்லாவற்றிலும் ஒரு பேரபாயம்
உருவாகியிருக்க்க் கூடிய இச்சூழ்நிலையில் அவற்றிற்கு எதிராக வரலாறு காணாத வகையில் இந்திய உழைக்கும் வர்க்கம்
ஓரணியில் எழுந்து நின்றது. அத்தகைய வேலை
நிறுத்தத்தில் கலந்து கொண்ட NFPE தோழர்கள் அனைவரும் வாழ்த்துக்கள்.
கோட்ட உதவி செயலர் தோழர் N.ரெங்கசாமி அவர்களுக்கு
பணி ஓய்வு பாராட்டு விழா
|
நமது கோட்ட உதவி செயலர் தோழர் N.ரெங்கசாமி அவர்கள் 30.09.2015 அன்று பணி ஓய்வு பெற்றார். செயற்குழுவில் அவருக்கு மிக சிறப்பான பாராட்டு விழா நடை பெற்றது.
கரூர் மா.கூ.ஒன்றிய
பெருந்தலைவர் திரு.R.M.தியாகராஜன்,நமது மாநிலத் தலைவர் தோழர் K.R.கணேசன், R4 மாநிலச் செயலர் தோழர் B.பரந்தாமன், R4 மாநிலத் தலைவர் தோழர்.J.தேவன், நமது மண்டல
செயலர் தோழர் T.பாலசுரமணியன், கோட்ட்த்தலைவர் P.குணசேகரன் மதுரை R3 கோட்டச்செயலர்
தோழர்.A.பாண்டியராஜன்
நமது R4 கோட்டச்சங்கத்தின் சார்பாக தோழர்.M.மோகன், M.துரை, கரூர் P3 கோட்டச்செயலர் தோழர். A.பழனிசாமி, திருச்சி P3 கோட்டச்செயலர் தோழர்.K.மருதநாயகம், P4 கோட்டச்செயலர் தோழர்.S.கோவிந்தராஜ் மற்றும் பல்வேறு கிளைச் செயலர்களும் கோட்டச் சங்க நிர்வாகிகளும் அவரது தொழிற்சங்க பணிகளையும் அவரது
சிறப்புகளையும் பாராட்டி பேசினர். கரூர் கிளை மற்றும் கோட்டச்சங்கத்தின் சார்பாக அவருக்கு நினைவு நினைவு பரிசு வழங்கி சால்வை
அணிவிக்கப்பட்ட்து.
தோழர். N.ரெங்கசாமி அவர்கள் வாழ்க பல்லாண்டு என கோட்டச்சங்கம் வாழ்த்துகிறது.
மண மக்கள் வாழ்க!
HRO கிளை
முன்னணித் தோழர்.D.இராஜ்பாபு, MSc, MPhil அவர்களுக்கும் A.பரமேஷ்வரி, M.sc அவர்களுக்கும்
திருமணம் - 16.09.2015 அன்று
திருச்சி காட்டூரில் மிக சிறப்பாக நடைப்ற்றது.
|
அரியலூர்
கிளைச் செயலர் தோழியர்.J.ரோசி,BE அவர்களுக்கும் A.பால்
பாஸ்கர்,BE. அவர்களுக்கும் திருமணம் - 17.09.2015 அன்று
இலால்குடியில் மிக்க சிறப்பாக நடைப்பெற்றது.
|
கோட்ட
உதவிச்செயலர் தஞ்சை தோழர் .S.சுரேந்தர் BA (E), அவர்களுக்கும் A.பவித்ரா, BA (E) அவர்களுக்கும் திருமணம் - 25.10.2015 அன்று கம்பத்தில்
மிக சிறப்பாக நடைப்ற்றது.
|
புதுக்கோட்டை கிளை
முன்னணித் தோழர் G.ஜானகிராமன்
அவர்களின் மகள் J.பால சிந்துஜா,BE அவர்களுக்கும் S.வினோத்,BE அவர்களுக்கும்
திருமணம் - 07.06.2015 அன்று மிக
சிறப்பாக நடைப்ற்றது
|
புதுக்கோட்டை கிளை
முன்னணித் தோழர் R..கலைசெல்வன்
அவர்களின் மகள் K.பொற்கொடி, B.Tech அவர்களுக்கும்.V.மகெஷ் B.Tech. அவர்களுக்கும் திருமணம். - 21.08.2015 அன்று மிக
சிறப்பாக நடைப்ற்றது..
|
கும்பகோணம் SRO தோழியர். G.பொன்னி
அவர்களின் மகள் K.தென்றல் (எ) அனிஷாகுமார்,B.Tech அவர்களுக்கும் M.விஷ்ணுபிரசாத்,B.E அவர்களுக்கும்
திருமண வரவேற்பு விழா 31.10.2015 அன்று மயிலாடுதுறையில்
மிக சிறப்பாக நடைப்ற்றது.
|
நமது
கோட்ட அமைப்புச்செயலர் திண்டிவனம் P.ஞானபிரகாசம்
அவர்களின் மகள் செல்வி. G.ரேவதி அவர்களுக்கும் T.சிவசங்கர் அவர்களுக்கும் திருமணம் – கிணத்துகடவில் 13.11.2015 (வெள்ளி) அன்று மிக சிறப்பாக நடைபெற்றது.
|
நமது
மூத்த தோழர் K. பிரான்சிஸ்
சேவியர் HSG I HSA அவர்களின்
மகள் F.இண்பன்டா
மேரி, BE அவர்களுக்கும் S.மோனிஷ்,BE அவர்களுக்கும் .திருமணம் – 15.11.2015 (ஞாயிறு) அன்று
திருச்சியில் மிக சிறப்பாக நடைபெற்றது.
|
மணமக்கள் எல்லா வளமும்
பெற்று பல்லாண்டு வாழ கோட்டச்சங்கம் வாழ்த்துகிறது.
|
நமது பணிகள் மேலும் சில:
கும்பகோணம் HPO –லிருந்து திருச்சி SPH வந்து கொண்டிருந்த Speed பைகளின் தாமதத்தை தவிர்த்துள்ளோம்.
|
நமது கோட்டத்தில் எல்லா ஊர்களுக்கும் சுகாதரமான குடி தண்ணீர் வழங்கிட ஏற்பாடு செய்துள்ளோம்.
|
நமது தோழியர்கள்
பெரும்பாலானோர்க்கு CCL பெற்று தந்துள்ளோம்.
|
செங்கை தோழர் A.அல் அமீன் அவர்களின் நிறுத்திவைக்கப்பட்ட இரண்டு வருட increment நிலுவை தொகை ரூ.21000/- பெற்று தரப்பட்டது.
|
கரூர் தோழர் K.குணசேகரன் அவர்களின் இரண்டு நாள் விடுபட்ட ஊதியம் பெற்று தரப்பட்ட்ட்து.
|
RTF-க்கு விண்ணப்பித்த நமது உறுப்பினர்கள்
அனைவருக்கும் தாமதமில்லாமல் உடனுக்குடன் RTF தொகை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டது.
|
பதவி உயர்வு பெற்ற GDS Place-ல் Outsiders-ஐ பணியமர்த்தி கொள்ள அனைத்து SRO-களுக்கும் உத்தரவு பெற்றுதரப் பட்டது.
|
கிளை மாநாடுகள்;
மயிலாடுதுறை கிளை மாநாடு 31.03.2015 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. தோழர் L.வெங்கடசுரமணியன் அவர்கள் தலைவராகவும், தோழர் G.சீனுவாசன் அவர்கள் செயலராகவும், தோழர் S.விஜய் அவர்கள் பொருளராகவும் ஒரு மனதாக
தேர்வு செய்யப்பட்டனர்.
|
விழுப்புரம் கிளை மாநாடு 17.05..2015 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. மாநிலச் செயலர் தோழர் K.இரமேஷ் அவ்ர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். மண்டல செயலர் தோழர் T.பாலசுரமணியன்,மாநில உதவிசெயலர். தோழர் M.கவனகன், APSO கோட்டசெயலர் தோழர் R.ஜெயசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். தோழர் S.இரவி, அவர்கள் தலைவராகவும், தோழர் E.கதிரவன் அவர்கள் செயலராகவும், தோழர்.S.T.சத்யநாராயணன் அவர்கள் பொருளராகவு ஒரு மனதாக
தேர்வு செய்யப்பட்டனர்..
|
அரியலூர் கிளை மாநாடு 29.04.2015 அன்று மிக சிறப்பாக
நடைபெற்றது. தோழர் P.வெங்கடேஸ்வரன் அவர்கள் தலைவராகவும், தோழியர்.J.ரோசி, அவர்கள் செயலராகவும், தோழர் R.ஆனந்த் அவர்கள் பொருளராகவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்..
|
திண்டிவனம் கிளை மாநாடு 13.09.2015 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. மாநிலச் செயலர் தோழர் K.இரமேஷ் அவ்ர்கள் கலந்துகொண்டு
சிறப்பித்தார். தோழர் P.ஞானபிரகாசம் அவர்கள் தலைவராகவும், தோழர் P.பாலமுருகன் அவர்கள் செயலராகவும், தோழர் V.முனியசாமி அவர்கள் பொருளராகவு ஒரு மனதாக
தேர்வு செய்யப்பட்டனர்.
|
கரூர் கிளை மாநாடு 04.10.2015 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. தோழர் P.உதயகுமார் அவர்கள் தலைவராகவும், தோழர் C.கணேசன் அவர்கள் செயலராகவும், தோழர் N.மகேஷ்வரி அவர்கள் பொருளராகவு ஒரு மனதாக
தேர்வு செய்யப்பட்டனர்.
|
புதிய நிர்வாகிகள்
அனைவருக்கும் கோட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள் !
|
டிசம்பர்’ 1,2 வேலைநிறுத்தம்
ஊதிய உயர்வு எதையும் வழங்கிவிட கூடாது எனபதற்காக 7-வது ஊதியகுழுவிற்கு மத்திய அரசு
பல மறைமுக நிர்பந்தங்களை அளித்து வருகிறது; GDS ஊழியர்களை 7-வது ஊதியகுழு வரம்புக்குள் கொண்டுவர மறுத்து இலாகா
அதிகாரி தலைமையில் குழு அமைத்துள்ளது.புதிய புதிய சேவைகளை அறிமுகபடுத்தி பணியிடங்களில்
ஊழியர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. இவற்றிற்கெல்லாம் தீர்வு கண்டிட வருகிற டிசம்பர்’ 1, 2 தேதிகளில் 48 மணி நேர வேலைநிறுத்த்த்திற்கு நமது
சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. நமது கோரிக்கையை வென்றிட வேலை
நிறுத்தத்தை வெற்றி கரமாக்குவோம்.
தோழர்களே! தோழியர்களே !!
அகில இந்திய அளவில்
உழைக்கும் வர்க்கத்தை வழிநடத்தும் படைத் தளபதியாய் விளங்கிடும் NFPE சங்கம் நமது கோட்டத்திலும், தவறுகளை சுட்டிகாட்டுவதிலும் ஊழியர்களின் பிரச்சனைகளை
தீர்த்து வைப்பதிலும், உரிமைக்ளை பெற்று தருவதிலும்
முண்ணனி பங்கு வகிக்கிறது.
வருங்காலத்திலும், எவ்வித சமரசமும் இன்றி
கோட்டச்சங்கத்தின் சங்கத்தின் பணி தொடரும்.
நாமார்க்கும் குடியை
அல்லோம்
நமனை அஞ்சோம் !
நன்றி! வாழ்த்துக்கள் !
திருச்சி-620001. தோழமையுடன்
16.11.2015 T.குணசேகரன்
கோட்டச்செயலர
No comments:
Post a Comment