உரத்துக் கேட்கும் மவுனம்
நடுகல் இருக்கக் கூடும் சிகாகோ மண்ணில்
தீரர்களின் கழுத்தைச் சுற்றி இறுக்கிய
கயிறுகளின் நடுக்கம் நிழாலாடக் கூடும்
சிறைச் சுவர்களில்
வெற்றி எக்காளமிட்ட வெறிநாய்களின்
புழுத்துப் போன கனவுகள் தட்டுப்படக் கூடும்
தூக்கு மேடையின் பாதாளக் குழியில்
தீரர்களின் கழுத்தைச் சுற்றி இறுக்கிய
கயிறுகளின் நடுக்கம் நிழாலாடக் கூடும்
சிறைச் சுவர்களில்
வெற்றி எக்காளமிட்ட வெறிநாய்களின்
புழுத்துப் போன கனவுகள் தட்டுப்படக் கூடும்
தூக்கு மேடையின் பாதாளக் குழியில்
வானொலிப் பெட்டியின் ஒலியளவைக் குறைப்பது போல
பின் ஒரு போதும் பேச விடாதப்படிக்குத்
திருகிப் போட்ட முதலாளித்துவத்தின் கைகள்
வீழ்ச்சி கண்ட தங்களது பொருளாதரத்தின்
தோல்வியைக் கூட உழைப்பாளிகளின் கணக்கில்
எழுத அலைந்து கொண்டிருக்க
பின் ஒரு போதும் பேச விடாதப்படிக்குத்
திருகிப் போட்ட முதலாளித்துவத்தின் கைகள்
வீழ்ச்சி கண்ட தங்களது பொருளாதரத்தின்
தோல்வியைக் கூட உழைப்பாளிகளின் கணக்கில்
எழுத அலைந்து கொண்டிருக்க
உலகெங்கிலிருந்தும்
அடிமைச் சங்கிலியை தகர்த்தெறியும் வேகத்தோடு
ஒன்றிணைந்து ஒரே கரமாக நீண்டு செல்லும்
பாட்டாளிகளின் கை ,
அதே குரல் நாண்களை எதிர்த் திசையில் திருகிப்
பேச வைக்கும் ஒவ்வொரு மே தினத்திலும்
முழங்க வைக்கும் ஒவ்வொரு போராட்ட நாளிலும்
மவுனத்தின் இடி முழக்கமாய்!
அடிமைச் சங்கிலியை தகர்த்தெறியும் வேகத்தோடு
ஒன்றிணைந்து ஒரே கரமாக நீண்டு செல்லும்
பாட்டாளிகளின் கை ,
அதே குரல் நாண்களை எதிர்த் திசையில் திருகிப்
பேச வைக்கும் ஒவ்வொரு மே தினத்திலும்
முழங்க வைக்கும் ஒவ்வொரு போராட்ட நாளிலும்
மவுனத்தின் இடி முழக்கமாய்!
எப்போதோ படித்தது!
No comments:
Post a Comment